• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மஞ்சுவிரட்டு காளைகளோடு வந்த அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ்-க்கு வரவேற்பு அளித்த இளைஞர்கள், குலவையிட்டு வரவேற்ற பெண்கள்.

ByG.Suresh

Apr 11, 2024

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸை ஆதரித்து மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

செல்லுமிடமெல்லாம் மக்கள் அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வரும் நிலையில், சிவகங்கை மாவட்டத்தின் பாரம்பரிய விளையாட்டான வடமாடு மஞ்சுவிரட்டில் ஈடுபடும் மஞ்சுவிரட்டு காளைகளோடு புலியடிதம்பம் கிராம இளைஞர்கள் வருகை தந்து அதிமுக வேட்பாளருக்கு வரவேற்பு அளித்தும், பெண்கள் குலவையிட்டும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

ப.சிதம்பரம் குடும்பத்தினர் 40 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஒதிய மரம் பெருத்தால் உத்திரத்திற்கு ஆகாது என்பதை போல ப.சிதம்பரமும் அவரது குடும்பத்தினரும் எந்த வகையிலும் மக்களுக்கு பயன்பட மாட்டனர் எனவும், தனக்கு ஒரு முறை வாக்களித்தால் தங்களது அடிப்படை பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்வேன் இன்று உறுதி அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் . இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் காளையார் கோவில் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவாஜி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.