• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

அதிமுக வில் தொடர் மோதல் இபிஎஸ் அதிரடி

ByA.Tamilselvan

Jun 22, 2022

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இரு தரப்பிலும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.நாளை அதிமுக பொதுக்குழு நடக்கவுள்ளது. மேலும் ஒபிஎஸ் கலந்து கொள்வாரா மாட்டாரா என்ற சுழ்நிலை நிலவுகிறது. . மேலும் பொதுக்குழுவை கூட்டக்கூடாது என வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் இபிஎஸ் அதிரடியாக சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.பொதுக்குழுவில் இது நடக்கும் இது நடக்காது என உத்தரவாதம் அளிக்க முடியாது.பொதுக்குழுவில்தான் உறுப்பினர்களின் விருப்பம் அறிவிக்கப்படும். இது ஜனநாயக நடைமுறை . எந்த விதியையும் சேர்க்கவோ ,நீக்கவோ2665 உறுப்பினர்கள் கொண்ட பொதுக்குழுவால் தான் முடியும் கொள்கைகளை உருவாக்குவது உள்ளிட்ட அனைத்துக்கும் பொதுக்குழுவுக்கே அதிகாரம் என இபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.