• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தியேட்டரில் ரகளையில் ஈடுபட்ட அதிமுக பேரூர் செயலாளர் கைது..,

ByKalamegam Viswanathan

Oct 28, 2023

மதுரை வாடிப்பட்டி அதிமுக நகரச் செயலாளர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் அசோக்குமார் வயது 37 இவர் கடந்த 23ஆம் தேதி சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் உள்ள தியேட்டரில் படம் பார்க்கும் பொழுது அசோக்குமார் மற்றும் இவருடன் வந்த நபர்கள், படம் பார்க்க வந்த மற்றவரிடம் தகராறு செய்துள்ளனர். உடனே தியேட்டரில் வேலை செய்யும் சப்பானி என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். அசோக்குமார் மற்றும் அவருடன் வந்தவர்கள் சப்பாணியை சரமாரியாக தாக்கியதாகவும், தகாத வார்த்தையில் திட்டியதாகவும் சப்பானி காடுபட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சேகர், அசோக்குமார் உள்பட நான்கு பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார். இது குறித்து தனிப்படை போலீசார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சேகர் உள்பட போலீசார் அசோக்குமார் மற்றும் மூணு பேரை தேடிவந்தனர் நேற்று இரவு அசோக்குமாரை போலீசார் கைது செய்தனர். மற்ற மூணு பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அதிமுக பேரூர் செயலாளர் அசோக்குமார் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் நாசர் படுத்தப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.