• Sat. Oct 3rd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கோவை ரயில் நிலையத்தில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ரயில்வே போலீசார் தீவிர சோதனை

BySeenu

Aug 14, 2024

கோவை ரயில் நிலையத்தில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டின் 78-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கடைவீதிகள், பஸ்நிலையங்கள், வணிக வளாகங்களில் போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மாநகர போலீசார் காந்திபுரம் பஸ் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.இதனைத்தொடர்ந்து காலை கோவை ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். குறிப்பாக ரெயிலில் கொண்டு செல்லப்படும் பார்சல்கள், சரக்குகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. இதேபோல் ரெயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில் பயணிகளின் உடைமைகள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், ரெயிலில் ஏறுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் ரெயில்வே போலீசார் அங்குள்ள பிளாட்பார்ம், பயணிகள் தங்குமிடம், ஓய்வறை, கழிப்பறை உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.