• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கார்த்திகை திருநாளை முன்னிட்டு, மகாதீபம் ஏற்ற கொப்பரை தயார் செய்யும் பணி தீவிரம்…

ByP.Thangapandi

Nov 25, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திடியன் கிராமத்தில் அமைந்துள்ள தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் திடியன் கைலாசநாதர் பெரியநாயகி அம்மன் மற்றும் தங்கமலைராமன் திருக்கோவிலின் மலை உச்சியில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மகாதீபம் ஏற்றுவதற்கான கொப்பரையை தயார் செய்யும் பணியில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.

நாளை காலை 9 மணியளவில் மலை உச்சிக்கு இந்த கொப்பரை எடுத்துச் செல்லப்பட்டு 100 மீட்டர் துணி, 200 லிட்டர் நெய் மூலம் மகாதீபம் பீடத்தில் தயார் செய்யப்படும் எனவும் சரியாக 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும் என கோவில் நிர்வாக கமிட்டியினர் தெரிவித்தனர்.