• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தேர்தல் பயத்தில்தான் வேளாண் சட்டங்கள் வாபஸ் – கார்த்திக் சிதம்பரம்

வரவிருக்கும் உ.பி., பஞ்சாப் தேர்தலை கண்டு அஞ்சிதான் மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டு இருக்கிறது என சிவகங்கையில் கார்த்திக் சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், இவ்வாறு கூறினார். மேலும், மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது போராடிய விவசாயத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று கூறிய கார்த்தி சிதம்பரம், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்காக மத்திய, மாநில அரசுகளால் ஏழை, எளிய மக்களுக்கு கொடுக்கப்படும் நிதி போதாததால்தான் அவர்கள் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள் என்றும், இது குறித்து நாடாளுமன்றத்தில் பேச விருப்பதாகவும் தெரிவித்தார்.