• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

இரவோடு இரவாக அழிக்கப்படும் விவசாய நிலங்கள்..,

ByG. Anbalagan

May 9, 2025

மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமா என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஜேசிபி வாகனங்களுக்கு இயக்க – பாறைகள் உடைக்க நீதிமன்றம் தடை உள்ளன தற்போது அதை மீறி பல்வேறு பகுதிகளில் ஜேசிபி வாகனங்கள் ,பாறைகள் உடைப்பது என தினம் தோறும் அரங்கேறி வருகின்றன. மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக ஜேசிபி வாகனங்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் இடம் அனுமதி பெற வேண்டும்.

ஆனால், தற்போது கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலங்களை அழித்து உல்லாச விடுதிகள் கட்ட சாலைகள் அமைக்கும் பணிகளிலும் தற்போது எங்கு பார்த்தாலும் ஜேசிபி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஒரு சிலர் விவசாயிகள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் குப்புட்டா வாகனங்களை பயன்படுத்தி சாலைகள் அமைத்து வருகின்றனர். தற்போது இது குறித்து சமூக ஆர்வலர்கள் வருவாய்த்துறை அதிகாரியிடம் புகார் அளித்தால் எந்தவித நடவடிக்கை எடுப்பதில்லை.

இந்நிலையில் கோத்தகிரி மையப்பகுதியில் ரிவர்சைடு பள்ளி அருகில் இரவு நேரத்தில் ஜேசிபி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுபோல கைகாட்டி , அரவேணு கீழ்கோத்திகிரி பகுதியில் இரவு பகலாக ஜேசிபி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் குடியிருப்பு வாசிகள் தூக்கமில்லாமல் மன உளைச்சலில் இருந்து வருகின்றனர் .

மேலும் இது குறித்து மாவட்ட நிர்வாகம் எந்தவித அனுமதி இல்லாமல் ஜேசிபி வாகனங்கள் இயக்கப்படும் நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.