• Fri. Apr 26th, 2024

ஜூன் 15ம் தேதிக்கு பின் தமிழகம் தழுவிய போராட்டம் -தொல்.திருமாவளவன் மதுரையில் பேட்டி

ByKalamegam Viswanathan

May 26, 2023

மதுவிலக்கை அமல்படுத்த கோரி .ஜூன் 15ம் தேதிக்கு பின் தமிழகம் தழுவிய போராட்டம் விசிக சார்பில் நடைபெறும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மதுரையில் பேட்டி அளித்துள்ளார்
இரு அவை தலைவர் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு குடியரசு தலைவர் துணைத் தலைவர் இருவரும் புறக்கணிப்பு.ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது. ஜனநாயகத்தை கொச்சைபடுத்தும் செயல்.காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட 18 கட்சிகள் புறக்கணிப்பு.வி.சி.க மே 28 தினத்தை கருப்புதினமாகவும்.அன்று கருப்பு சட்டையணிந்து கருப்பு கொடி ஏற்றப்படும்.ஹிட்லரை கொள்கை தலைவராக கொண்ட பாசிச ஆர்எஸ்எஸ் கட்சி சாவர்கர் பிறந்த தினம் அதனை கொண்டாடும் விதமாக மே 28 ல் திறக்கின்றனர். ஆந்திரா தலைமை செயலகம் சட்டிஸ்கர் தலைமை செயலகம் முதல்வர் திறந்தனர். அதேபோல் புதிய பாராளுமன்றத்தை பிரதமர் திறப்பதில தவறு இல்லை என நிர்மலா சீத்தாராமன் கூறியது. பற்றி.?’தலைமை செயலகம் வேறு சட்டமியற்றும் அவை வேறு பாராளுமன்றம் சட்டமியற்றும் அவை அங்கு ஜனாதிபதியை கொண்டு திறக்க வேண்டும்.

நிர்மலா சீதாராமன் முதலில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை அழைக்கட்டும். அவர்கள் வரவில்லை என கூறிய பின்பு எங்களது முடிவை அறிவிப்போம்.செங்கோல் என்பது மதசார்பற்றது.செங்கோலில் நந்தி சிலை உள்ளது. இது மத சின்னமாக உள்ளதால் இதனை எதிர்கிறோம் மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் பாஜவை எதிர்கின்றோம் .மரக்காணம், தஞ்சை மது மரணம் பற்றி?விசிக மது விலக்கு கொள்கையை ஆதரிக்கிறோம்.இதில் மாநிலங்கள் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் .ஜூன் 15ம் தேதிக்கு பின் தமிழகம் தழுவிய போராட்டம் விசிக சார்பில் நடைபெறும் திமுக தேர்தல் அறிக்கையில் மது ஒழிப்பு பற்றி கூறியுள்ளது. அதனை செயல’ படுதத வேண்டும்.அரசு மாவட்டம் தோறும் உளவியல் ஆலோசனை மையம் அமைக்கவும்.தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை குறைக்கவும்.விசிக பொறுத்தவரை பூரண மதுவிலக்க கொண்டுவர வேண்டும்.2024ல் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தூக்கியெறிய வேண்டும்.
கர்நாடாகவில் பாஜக தோற்க ஹிந்துதளே காரணம் .வெறுப்பு அரசியலில் பாஜக அனைத்து கட்சி களும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.அதிமுக மதுவிலக்கு கொள்கையை தெளிவுபடுத்த வேண்டும்.மக்கள் பிரச்சினையில் அரசிற்கு எதிராக போராட வேண்டும் என்பது நோக்கமல்ல.சில நேரங்களில் அரசின் கொள்கைக்கு எதிராக செயல்படும் சூழல் உள்ளது.
தற்போதுள்ள நிலையில் காங்கிரஸ் – திமுக கூட்டணியில் விசிக தொடரும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் . திருமாவளவன கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *