• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

எட்டு தோல்வி எடப்பாடி பழனிச்சாமியே அதிமுக விட்டு ஓடிவிடு…மதுரையில் பரபரப்பு போஸ்டர்

ByKalamegam Viswanathan

Mar 17, 2023

எட்டு தோல்வி எடப்பாடி பழனிச்சாமியே அதிமுக கழகத்தை விட்டு ஓடிவிடு என்ற வாசகங்களுடன் மதுரையில் போஸ்டர் ஒட்டிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.
மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

இதில் எட்டு தோல்வி எடப்பாடி பழனிச்சாமியே அதிமுக கழகத்தை விட்டு ஓடிவிடு என்ற வாசகத்துடனும்,அதிமுக கழகத்தை அழித்துக் கொண்டிருக்கும் துரோகி எடப்பாடி பழனிச்சாமியே கழகத்தை விட்டு வெளியேறு இல்லை என்றால் தொண்டர்களின் துணைவோடு வெளியேற்றுவோம் என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகளை மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் ஓபிஎஸ் ஆதரவாளர் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பெயருடன் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.