• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

உயிரிழந்த மனைவியின் மீதான பாசத்தில் 5 லட்ச ரூபாய்க்கு தத்ரூபமாக சிலை வைத்த பாசக்கார கணவர்..!

Byகுமார்

Sep 14, 2023

மதுரை அண்ணாநகர் வைகை காலனியை சேர்ந்தவர் மார்கண்டன் (வயது 83). இவர், பொதுப்பணித்துறையில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ருக்மணி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். மேலும் பேரன், பேத்திகள், கொள்ளு பேத்திகளும் உள்ளனர். இந்தநிலையில் ருக்மணி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு இறந்தார். மனைவியின் பிரிவால் மார்கண்டன் கடந்த இரண்டு வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் இருந்து வந்துள்ளார் மேலும் மருத்துவர் அணுகி தற்போது தான் சரியாகி உள்ளார்.மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார்.இதற்கிடையே, மனைவியின் நினைவாக, அவருக்கு சிலை அமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டார். அதன்படி, ரூ.5 லட்சம் செலவில் மனைவி ருக்மணிக்கு மெழுகு சிலை செய்தார். அதை தனது வீட்டிலேயே வைத்து வணங்கி வருகிறார். மனைவி இறந்த பின்னர் அவர் தன்னுடன் வாழ்வதாக எண்ணும் கணவர், இந்த காலத்தில் ஆச்சர்யமான ஒரு நிகழ்வுதான்.