• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கனமழை முன்னேற்பாடாக தேவையான பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ள அறிவுறுத்தல்

Byமதி

Nov 17, 2021

வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக நாளை சென்னையில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், மற்ற இடங்களில் பரவலாக மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதிகனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை மக்கள் தங்களுக்கு தேவையான குடிநீர், பால், உணவு, காய்கறிகள் மாதிரியான பொருட்களை இரண்டு நாட்களுக்கு இருப்பு வைத்துக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவுத்தி உள்ளது. மேலும், தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற 600-க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுமட்டுமின்றி பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.