• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அக்.20ல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கான ஆலோசனை..!

Byவிஷா

Oct 18, 2023

நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையொட்டி, சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கான ஆலோசனை அக்டோபர் 20ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது
தீபாவளிப் பண்டிகை வரும் 12 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் செல்லும் வகையில் சிறப்புப் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆலோசனையில் மொத்தமுள்ள 8 போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் என 4 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்ற அறிவிப்பு வரும் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும், சென்னையில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க மாதவரம், தாம்பரம், கோயம்பேடு, கே.கே.நகர் உள்ளிட்ட 5 இடங்களிலிருந்து தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.