மதுரை மாவட்டம் தமிழக முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை அ.தி.மு. க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி பொது மக்கள் சந்தித்து பேசி வருகிறார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் முதல் கட்ட பயணத்தை தொடங்கி தற்போது நான்காவது கட்டமாக செப்டம்பர் 1ஆம் தேதி மதுரையில் தொடங்குகிறார். அதன்பின் மாவட்டம் முழுவதும் பல்வேறு தொகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் செய்ய உள்ளார் செப்டம்பர் 4 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சோழவந்தான் தொகுதி க்குட்பட்ட வாடிப்பட்டியில் பிரச்சார பயணம் செய்கிறார். இதற்கான முன் ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த பணிகளை மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார். எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்வதற்காக நகர் புறச்சாலை வாடிப்பட்டி பஸ் நிலையம், சந்தை வாசல், பேரூராட்சி அலுவ லகம் முன்பு என 3 இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து பேரூராட்சி அலுவலகம் முன்பு இடத்தினை தேர்வு செய்தார். அதன் பின் பேரூர் செயலாளர் அசோக்குமாருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 54 அடி உயர கொடிக்கம்பம் கட்டுமான பணியினை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.
பின் ஆட்டோகளில் எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சி பயண அழைப்பு துண்டு பிரசுரங்களை ஆட்டோக்களில் ஒட்டியும், அழைப்பு கடிதத்தை ஆட்டோ டிரைவர்களிடமும், பெண்கள், பொது மக்கள், வியாபாரிகளிடம் வழங்கினார்
உடன் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் எம் வி கருப்பையா, மாணிக்கம் மகேந்திரன், மாநில பேரவை நிர்வாகி ராஜேஷ் கண்ணா, ஒன்றிய செயலாளர்கள் காளிதாஸ் கொரியர்
கணேசன் அரியூர் ராதாகிருஷ்ணன், எம் வி பி ராஜா மாவட்டத் துணைச் செயலாளர் லட்சுமி உள்பட கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர்.













; ?>)
; ?>)
; ?>)