• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

வந்துவிட்டது வாட்ஸப்பிலும் விளம்பரம் : மெட்டா அதிரடி

Byவிஷா

Jun 17, 2025

அதிகப்படியான பயனாளர்களைக் கொண்ட வாட்ஸப்பிலும் விளம்பரங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக மெட்டா நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.
பயனரின் அனுபவத்தை பாதிக்காமல், தளத்தை வருவாயின் மூலமாக மாற்றும் நோக்கத்தில் மெட்டா இந்த புதிய முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனிப்பட்ட உரைகள், அழைப்புகள், ஸ்டேட்டஸ்கள் அனைத்தும் குறியாக்கம் செய்யப்பட்டவை என்றும், அவை விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்படமாட்டாது என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
வாட்ஸப்பில் வரும் விளம்பரங்கள் வயது, மொழி விருப்பங்கள், பின்தொடரும் சேனல்கள், முந்தைய விளம்பரங்களுடனான தொடர்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009-இல் ஜான் கோம் மற்றும் பிரையன் ஆக்டன் ஆகியோரால் தொடங்கப்பட்ட வாட்ஸ்அப்பின் முக்கிய அடையாளம் விளம்பரமில்லாத அனுபவம். ஆனால், 2014-இல் முகநூல் வாங்கிய பின், நிறுவனத்தின் இரு ஸ்தாபகர்களும் விலகினர். தற்போது மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ், அதன் மிகப்பெரிய மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப்பை வருமானம் தரக்கூடிய தளமாக மாற்றுவதற்கான திட்டங்களில் தீவிரமாக இறங்கியுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்ட இரண்டு முக்கிய மாற்றங்கள் இதனை தெளிவாக வெளிப்படுத்துகின்றன.
சேனல்களுக்கு சந்தா வசூலிக்கும் வாய்ப்பு: வாட்ஸ்அப்பில் சமீபத்தில் அறிமுகமான சேனல்கள், அரசியல் தலைவர்கள் முதல் விளையாட்டு வீரர்கள், நிறுவனங்கள் வரை பலரால் பயன்படுத்தப்படுகின்றன. இப்போது, அந்த சேனல்களில் “பிரத்தியேக புதுப்பிப்புகள்” பெற விரும்பும் பயனர்கள், மாதாந்திர கட்டணத்தை செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படலாம்.
மெட்டாவின் வருவாயில் பெரும்பகுதி விளம்பரங்களிலிருந்து வருகிறது; 2025 ஆம் ஆண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய் 164.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, அதில் 160.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் விளம்பர விற்பனையிலிருந்து வருகிறது. இதற்கிடையில், ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகளை மிகவும் ஈர்க்கக்கூடியதாகவும் வெளிப்படுத்தக்கூடியதாகவும் மாற்ற வாட்ஸ்அப் பல்வேறு புதிய அம்சங்களை வெளியிட்டுள்ளது.