• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சட்டப்பேரவையில் அமளி: அதிமுக உறுப்பினர்கள் ஒருநாள் சஸ்பெண்ட்!

ByP.Kavitha Kumar

Mar 28, 2025

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவர்களை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சட்டப்பேரவை தவைவர் அப்பாவு உத்தரவிட்டார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய அலுவல்கள் தொடங்கின. சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச தொடங்கினார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டி அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நீங்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். அதில் எந்த மாற்றமும் கிடையாது. தொலைக்காட்சியைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன் சொல்வதற்கு தயாராக இல்லை என்றார். இதனைக் கேட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை வெளியேற்றுமாறு அவை காவலர்களுக்கு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு உத்தரவிட்டார். இதையடுத்து அவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், தொடர் அமளியில் ஈடுபட்டதால் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சட்டப்பேரவை தலைவர் அப்பாவு உத்தரவிட்டார்.