• Sat. Sep 20th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தப்பிக்க முயன்றதால் மருத்துவமனையில் அனுமதி..,

ByKalamegam Viswanathan

Jun 15, 2025

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள வி.சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல் என்பவரது மகன் பிரபாகரன். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கோவிலாங்குளத்தைச் சேர்ந்த அழகேந்திரன் என்ற பட்டியலின இளைஞர் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததாக கூறி சத்திரப்பட்டி கண்மாய் கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் பிரபாகரன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர் பிரபாகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக ஜாமினில் வெளியே வந்தார்.

இந்த நிலையில் வழக்கில் பிரபாகரன் முறையாக வழக்கில் ஆஜராகாத நிலையில் காவல்துறையினர் நேரடியாக பிரபாகரனின் வீட்டிற்கு சென்று பிரபாகரனை தேடிய போது இல்லாத நிலையில் பிரபாகரனின் தந்தை முத்துவேலை சந்தித்து பிரபாகரனை காவல் நிலையத்திற்கு வரச் சொல்லிவிட்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் வீட்டிற்கு வந்த பிரபாகரன் தனது தந்தையை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக கூறியதை கேட்டு ஆத்திரத்தில் தனது நண்பரான அய்யனாரை அழைத்தபடி சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்குள் நள்ளிரவில் முகத்தில் துணியை முகமடி போல அணிந்தவாறு சென்று காவலர் பால்பாண்டியை தாக்க முயன்றதோடு காவல் நிலையத்தில் உள்ள கம்ப்யூட்டர் , மேஜை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கியதோடு காவல் நிலையத்தின் கதவை மூடிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சத்திரப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்த் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

மதுரையில் வி. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நள்ளிரவில் கொலை குற்ற வழக்கில் தொடர்புடைய நபர் காவல் நிலையத்திற்குள் புகுந்து காவல் நிலையத்தை அடித்து நொறுக்கி காவலருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் தமிழக முழுவதிலும் பெரும் பரபரப்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி காவலருக்கு மிரட்டல் விட்டு சென்ற வீ்சத்திரப்பட்டியை சேர்ந்த பிரபாகரன் மற்றும் அவரது நண்பரான அய்யனார் ஆகிய இருவரும் விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி காவல் சோதனை சாவடி அருகே சென்ற போது காவல்துறையினர் கைது செய்து மதுரை மாவட்ட காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அப்போது கண்மாய் பகுதியில் இருந்து தப்பியோட முயன்ற பிரபாகரன் குதித்து ஓடியபோது வலது கை, இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.