• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை மாவட்டம் நகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் புதிய மாணவ, மாணவிகள் சேர்க்கை – மலர் தூவி, சால்வை அணிவித்து வரவேற்பு

ByG.Suresh

Mar 11, 2024

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை 48 காலணி பகுதியில் அமைந்துள்ள நகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று திங்கட்கிழமை காலை சுமார் பத்து மணி அளவில் தமிழக முதல்வரின் புதிய மாணவர் சேர்க்கை திட்டத்தின் கீழ் புதிதாக 25 மாணவர்களை இந்த பள்ளியில் பெற்றோர்கள் சேர்த்தனர் .புதிதாக சேர்ந்த மாணவர்களை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமையில் வட்டார கல்வி அலுவலர் இந்திராணி முன்னிலையில் முதல் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை பேரணியும் நடைபெற்றது. புதிதாக சேர்ந்துள்ள மாணவ மாணவிகளை தொடக்கக் கல்வி அலுவலரும் பள்ளி தலைமை ஆசிரியை மரிய செல்வியும்கிரீடம் அணிவித்து மாணவ மாணவிகளுக்கு சால்வை அணிவித்து கெளரவித்து பள்ளிக்குள் மலர் தூவி வரவேற்று அழைத்து சென்றனர்.இதனைத் தொடர்ந்து அரசுபள்ளியில் முதலாம் வகுப்பு தீவிர மாணவர்சேர்க்கைக்கான விழிப்புணர்வு துண்டு பிரசச்சுரங்களை மாணவ மாணவிகளின் பெற்றோர்களிடம் தலைமையாசிரியை மற்றும் வட்டார கல்வி அலுவலரும் வழங்கினார்கள்.புதிதாக சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்தலைமையாசிரியை மரிய செல்வி, பள்ளி ஆசிரிய ஆசிரியைகள், மாணவிகள்,பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.