• Mon. Mar 17th, 2025

பள்ளத்தூர் பகுதியில் செயல்படும் அரிசி ஆலைகளால் பல்வேறு நோய்த்தொற்று ஏற்படுவதாக ஆட்சியரிடம் மனு

ByG.Suresh

Mar 11, 2024

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூரில் சுமார் 50க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் செயல்பட்டு வருவதாகவும், இந்த அரிசி ஆலைகளில் இருந்து வெளிவரும் சாம்பல் புகை மற்றும் தூசிகளால் நாராயணபுரம், கீழக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மூச்சுத்திணறல் சுவாச பிரச்சினை போன்ற பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படுவதாகவும், இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் பள்ளத்தூர்பேரூராட்சி நிர்வாகத்திற்கும், பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாகவும், பள்ளத்தூர் பகுதியில் உள்ள அரிசி ஆலைகளை ஆய்வு செய்து கிராமத்தில் உள்ள நீர் நிலைகள் மாசடைவதை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும், அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று திங்கட்கிழமை மதியம் சுமார் 12 மணியளவில் ஆட்சியரக பகுதியில் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.