• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நாளை முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

Byவிஷா

Feb 29, 2024

நாளை முதல் தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தெரிவித்திருப்பது..,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் பொருட்டு சிறப்பு முயற்சிகளாக இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் மற்றும் நான் முதல்வன் திட்டங்களுடன் பிற முன்னெடுப்புகளான தற்காப்பு கலைப் பயிற்சி, கல்வி சுற்றுலா, கல்வி சாரா இணை செயல்பாடுகளான இலக்கிய மன்றம், வினாடி வினா போட்டிகள், கலைத் திருவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் போன்றவை தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, மாணவர்களை அரசு பள்ளிகளை நோக்கி ஈர்க்கும் வண்ணம் செயல்பட வேண்டியது பெற்றோர்.
ஆசிரியர் மற்றும் பள்ளிக் கல்வி நிர்வாகம் என்ற முக்கூட்டின் தலையாய கடமையாகும். அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் 5 வயது பூர்த்தியடைந்த மற்றும் பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு 01.03.2024 முதல் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றிட அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.