• Sat. Apr 27th, 2024

அதிமுக பொதுக்குழு விசாரணை நாளை ஒத்திவைப்பு

ByA.Tamilselvan

Jan 10, 2023

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை தள்ளி வைத்தது.
அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு குறித்து நடந்த விசாரணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை உருவாக்கிய போது என்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டதோ, அதுதான் தற்போது பின்பற்றப்பட்டது.ஆனால், முன்னர் எதிர்ப்பு தெரிவிக்காத ஓ.பி.எஸ்., தற்போது ஒற்றைத்தலைமை குறித்து தொண்டர்களிடம் செல்ல வேண்டும் என கூறுகிறார் – இ.பி.எஸ். தரப்பு வாதம்.
ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதும் அதிமுக கட்சி விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதும் அடிப்படை தொண்டர்களால் அல்ல, மாறாக பொதுக்குழு உறுப்பினர்களால்தான்.
இரட்டை தலைமையில் ஆளுக்கொரு கருத்து இருக்கும், அப்போது ஒரு முடிவெடுக்க பல்வேறு தடுமாற்றங்கள் இருக்கும் அது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவேதான் கட்சியை வழிநடத்தவும், முடிவெடுக்கவும் ஒற்றைத் தலைமை என முடிவு எடுக்கப்பட்டது
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதும் அதிமுக கட்சி விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதும் அடிப்படை தொண்டர்களால் அல்ல மாறாக பொதுக்குழு உறுப்பினர்களால் தான்- இ.பி.எஸ். தரப்பு வாதம்.ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்க அதிமுக பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்றால், அதனை ரத்து செய்வதற்கும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு
பொதுக்குழுவுக்கு கட்சியின் விதிகளை கட்டமைக்கவும், அமல்படுத்தவும் முழு அதிகாரம் உண்டு;அப்படி இருக்கும்போது ஓ.பி.எஸ் தரப்பு அடிப்படை உறுப்பினர்களை கூட்ட வேண்டும் என்று ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர் ?
ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் பங்கேற்ற 2,460 உறுப்பினர்கள் கலந்தகொண்டு பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக ஒருமனதாக அங்கீகரித்தனர், இது 94.5% ஆதரவு ஆகும்-இ.பி.எஸ். தரப்பு வாதம்.
இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *