

ஆண்டுக்கு ஒரு முறை ஆடி மாதம் அமாவாசை இந்த ஆண்டு (ஜூலை17, ஆகஸ்ட் 16)ம் நாள் என்று இந்த ஆண்டு இரண்டு அமாவாசை வருவதுடன் புதன்கிழமை தினம் தான் அமாவாசைக்கு உகந்த நாள் என்பது.
இன்றைய அமாவாசை பகல் பொழுதில் தொடங்கி பகலிலே முடிந்து விடுவதால். இன்றைய அமாவாசை தினத்தில் கன்னியாகுமரி முக்கடல் சங்கம் பகுதியில். ஒவ்வொருவர் குடும்பத்தில் மறைந்த தந்தை,தாய் மற்றும் ஏனைய உறவுகளின் நினைவாக ஆடி அமாவாசை தினத்தில் திதி (தற்பணம்)கொடுப்பது வாழும் மக்களின் சந்ததிகளுக்கு பாதுகாப்பும், ஆசியும் என்ற நம்பிக்கை காலம், காலமாக இந்து மத மக்களின் நம்பிக்கை.
ஆடி அமாவாசை நாளில் கன்னியாகுமரி கடலோரத்தில், கடல் மண் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.
இந்த ஆண்டு இரண்டாவது ஆடி அமாவாசை தினமான (ஆகஸ்ட்_16) நாள் வரும் அமாவாசை தினத்தையே தங்கள் குடும்ப முன்னோர் நினைவு போற்றும் தினமாக அனுஸ்டிப்பு என்ற நிலையில். கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மற்றும் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் பகுதியிலும் மிக குறைந்த எண்ணிக்கையிலே மக்கள் முன்னோர் நினைவு புனித நீராடல் நடைபெற்றது.

