

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டில் நிதியிலிருந்து மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார், இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் அடுத்த புது கிராமம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ12 லட்சம் ஒதுக்கப்பட்டு தேரூர் பேரூராட்சி புதுகிராமம் 1வது வார்டில் அங்கன்வாடி கட்டும் பணி முடிந்து அதன் திறப்பு விழா இன்று (17-07-2023) நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் விஜயவசந்த் கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் முன்னதாக டாக்டர் அம்பேத்கார் சிலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்டத் தலைவர் கே. டி. உதயம் வட்டார தலைவர் காலபெருமாள், குமரி கிழக்கு மாவட்ட எஸ். சி. எஸ்டி பிரிவு தலைவர் ஜோயல், தங்கம் நடேசன், தேரூர் பேரூராட்சி தலைவர் அமுதா ராணி வின்சென்ட், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பென்னிகிரகாம் மற்றும் தேரூர் பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



