• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நரிக்குறவர்கள் பழங்குடியினர் பட்டியலில் இணைப்பு- முதலமைச்சர் வரவேற்பு

ByA.Tamilselvan

Dec 16, 2022

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்களை இணைத்ததற்கு வரவேற்பு தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் …..நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி ஏற்கனவே நான் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தேன். நம்முடைய தொடர் முயற்சிகளின் விளைவாக, பாராளுமன்ற மக்களவையில் இதற்கான சட்டவரைவு நிறைவேற்றப்பட்டிருக்கும் முக்கியமான நடவடிக்கையை வரவேற்கிறேன். நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர் சமூகங்களின் கண்ணியமான வாழ்க்கையை உறுதிசெய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.