உலக அளவில் முதல் பணக்காரர்களின் வரிசையிலி இருந்த அதானி குழுமம் தற்போது அதன் பங்களின் சரிவால் பல லட்சம் கோடி இழப்பை சந்தித்து வருகிறது
அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை கூறியதை அடுத்து அதன் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்து வருகின்றன. ஜனவரி 24ம் தேதியன்று அதானி குழுமப் பங்குகளின் மதிப்பு ரூ.19.20 லட்சம் கோடியிலிருந்து, 27ம் தேதி ரூ.15.02 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. வெறும் 2 நாட்களில் ரூ.4.18 லட்சம் கோடி இழந்திருக்கிறது.இதனால் உலக பணக்காரர்களின் பட்டியலில் 2 வது இடத்தில் இருந்த அதானி குழுமம் 7 மற்றும் 9 வது இடங்களுக்கு தள்ளப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
2 நாட்களில் ரூ.4 லட்சம் கோடியை இழந்த அதானி








