• Sun. Jan 4th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இணையத்தொடரில் நடிகை திரிஷா..

Byகாயத்ரி

Jan 24, 2022

என்றென்றும் கொள்ளை அழகில் ரசிகர்களை இன்றுவரை தன் வசம் வைத்திருப்பவர் நடிகை திரிஷா. இன்னும் இளமை இவருக்கு மட்டும் கூடுதலாகவே இருக்கிறது என்பது பலரது கருத்து.தற்போது சில படங்களில் நடித்து வரும் திரிஷா கதை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர்.

சாமி, கில்லி, பீமா, சர்வம் போன்ற பல படங்களில் நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்து வந்தார். இவர் திரைத்துறைக்கு வந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் நாயகியாக நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இவர் சமீபத்தில் தெலுங்கு மொழியில் பிருந்தா என்ற இணையத் தொடரில் நடிக்க சம்மதித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. காவல்துறை அதிகாரியாக முதன் முதலில் நடிக்கும் நடிகை திரிஷா சீருடையுடன் படப்பிடிப்பு தளத்தில் நாய்களைக் கொஞ்சும் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. இதனை அவருடைய ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.