பொங்கலுக்கு வெளியாகும் விஜயின் வாரிசு படம் குறித்து நடிகை சங்கீதா கொடுத்துள்ள புதிய அப்டேட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது .
தளபதி விஜய்யின் நடிப்பில் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வாரிசு. பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் . இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகின்றார். தமன் இசையமைக்க இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இப்படத்தில் இருந்து ரஞ்சிதமே எனும் பாடல் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ந்து Youtubeல் பல சாதனைகளையும் படைத்து வருகிறது. சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், யோகி பாபு, ஷ்யாம், குஷ்பூ, சங்கீதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.இதில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருக்கும் சங்கீதா ஜீ தமிழ் நிகழ்ச்சியில் வாரிசு படம் குறித்து பேசியுள்ளார்.
“தளபதி விஜய் பல வருடங்கள் களித்து இப்படியொரு படத்தில் நடிக்கிறார். வாரிசு திரைப்படம் கண்டிப்பாக சிறப்பான Family Entertainer-ஆக இருக்கும். அதுமட்டுமின்றி நல்ல மெசேஜ் கூட படத்தில் இருக்கிறது. குடும்பமாக வந்த இப்படத்தை பார்த்து ரசிக்கலாம்” என்று கூறியுள்ளார்.இவரின் இந்த தகவலை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
வாரிசு படம் குறித்து நடிகை சங்கீதா கொடுத்த புதிய அப்டேட்
