• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

கனிமொழிக்கு புகழாரம் சூட்டிய நடிகை குஷ்பு

ByA.Tamilselvan

Oct 28, 2022

கனிமொழியின் ட்விட்டர் பதிவு குறித்து குஷ்பு புகழாரம் சூட்டியுள்ளார். தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக், பா.ஜனதாவை சேர்ந்த நடிகைகள், குஷ்பு, காயத்ரி ரகுராம், நமீதா, கவுதமி ஆகியோரை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். சமூக வலைதளங்களில் இது வைரலாக பரவியது. குஷ்புவும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இதற்கு வருத்தம் தெரிவித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
கனிமொழியின் இந்த பதிவுக்கு நன்றி தெரிவித்து குஷ்புவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்… மிக்க நன்றி கனி. உங்கள் நிலைப்பாட்டையும், ஆதரவையும் உண்மையிலேயே பாராட்டுகிறேன். நீங்கள் பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்காக எப்போதும் துணை நிற்கும் ஒருவராக இருந்திருக்கிறீர்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.