அஜித்குமார் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் தற்போது இந்தி மொழியில் தயாரிக்கப்படவுள்ளதுஇதில் அஜித்குமார் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க அக்க்ஷய்குமார் மற்றும் அஜய் தேவ் கான் இருவருக்கும் கடும் போட்டி நிலவுகிறதாம்.
2019 ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகை அன்றுஅஜித்குமார் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் மக்களின் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.
அஜீத்குமார் நடிப்பில் வெளியான வீரம், வேதாளம், விவேகம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய சிறுத்தைசிவா தான் இந்த திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். தற்போது விஸ்வாசம் திரைப்படம் இந்தி மொழியில் உருவாகவுள்ளது.
இதில் அஜித் கதாபாத்திரத்தில் நடிக்க இந்தியில் பிரபல நடிகரான அக்க்ஷய்குமார் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்பட்டது. தற்போது நடிகர் அஜய் தேவ் கானும் அஜித்குமார் கதா பாத்திரத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம்.
இருவரில் யார் அஜித்குமார் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் என்பது விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.