• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய்யின் கட்சி பதிவு – கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாட்டம்.

BySeenu

Feb 2, 2024

டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் அவரது கட்சியை பதிவு செய்ததையடுத்து கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர். நடிகர் விஜயின் அரசியல் கட்சியின் பெயரை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சற்றுமுன் டெல்லி தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் பதிவு செய்தார். “விஜய் மக்கள் இயக்கம்” என்பதை அரசியல் கட்சியாக பதிவு செய்து “தமிழக வெற்றி கழகம்” என அரசியல் கட்சி தொடங்கப்பட்டதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதனை தமிழ்நாடு முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாடி வருகின்றனர். கோவையிலும் கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், இயக்க கொடியுடன் கேக் வெட்டியும் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.


குறிச்சி பகுதியில் கோவை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிகழ்வில் கோவை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் விக்கி, இளைஞரணி தலைவர் பாபு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாக முழக்கங்களை எழுப்பினர். இதே போல் கோவையில் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்ட நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.