• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறும் பிரபல இந்திநடிகை கத்ரீனாகைப், நடிகர் விக்கி கவுசல் திருமண ஏற்பாடுகள்..!

பிரபல இந்தி நடிகை கத்ரீனா கைப், நடிகர் விக்கி கவுசல் திருமண ஏற்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.

இவர்கள் நீண்ட நாட்களாக காதலித்து தற்போது திருமணத்துக்கு தயாராகி உள்ளனர். ராஜஸ்தானில் உள்ள 700 வருட பழமையான சிக்ஸ் சென்ஸ் கோட்டையில் வருகிற 9-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. அந்த கோட்டை கோடிக்கணக்கான செலவில், மலர்கள், வண்ண விளக்குகள் மற்றும் வரவேற்பு வளைவுகளால் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள், நடிகர், நடிகைகள் அழைக்கப்பட்டு உள்ளனர்.


திருமணத்துக்காக மணமக்கள் தங்கும் சொகுசு விடுதியின் ஒரு நாள் வாடகை ரூ.4 லட்சம். மேலும் உறவினர்கள், நடிகர் நடிகைகள் தங்க அங்குள்ள ஆடம்பர ஓட்டல்களின் அறைகள் அனைத்தையும் முன்பதிவு செய்துள்ளனர். திருமணத்திற்கான ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்து வருகிறது. ஆனால் கத்ரீனா கைஃப் தரப்பில் இன்னும் இது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இத்திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு கத்ரீனா கைப் மற்றும் கவுசல் தரப்பில் மிகவும் நெருக்கமான சினிமாபிரபலங்கள் 120 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் இரண்டு தடுப்பூசியும் போட்டவர்கள் ஆவர்.


ராஜஸ்தானின் மதோபூர் மாவட்டத்தில் உள்ள சவாய் என்ற இடத்தில் உள்ள சிக்ஸ் சென்சஸ் கோட்டையில் நடக்கும் இத்திருமண ஏற்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகமும் தேவையான முன்னேற்பாடுகளை செய்துள்ளது. திருமணத்திற்கு முக்கிய பிரமுகர்கள் வருவார்கள் என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜேந்திர கிஷன் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கத்ரீனா கைஃப் திருமணத்திற்கு ஏற்பாடுகளை செய்யும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதில் போக்குவரத்து ஏற்பாடுகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதுதிருமண ஏற்பாடுகளை செய்ய கத்ரீனா மற்றும் விக்கி கவுசல் குடும்பத்தினர் இன்று ஜெய்ப்பூர் புறப்பட்டு செல்கின்றனர். திருமண ஜோடி 6ம் தேதி மும்பையில் இருந்து புறப்பட்டு செல்கின்றனர். 7ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை திருமண நிகழ்ச்சிகள் நடக்கிறது. இத்திருமணத்தில் பங்கேற்க சல்மான்கான் மற்றும் ரன்பிர் கபூர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ரன்பிர் கபூரும், கத்ரீனாவும் 5 ஆண்டுகளாக வெளிப்படையாக அறிவித்து காதலித்ததோடு தனி வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.