• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கீழடியில் நடிகர் சூர்யா, ஜோதிகாவை அழைத்து வந்தது தான் சாதனை- இராம சீனிவாசன் பேட்டி

Byகுமார்

Mar 26, 2024

தேர்தல் பத்திரத்தின் மூலம் பெறப்பட்ட பணத்தை பிற கட்சிகள் எப்படி செலவழிக்குமோ அதே போன்று பாஜகவும் செலவழிக்கும் என மதுரையில் பாஜக வேட்பாளர் இராம சீனிவாசன் பேட்டி

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பேராசிரியர் இராம சீனிவாசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான சங்கீதாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார், பாஜக வேட்பாளர் இராம சீனிவாசனுக்கு மாற்று வேட்பாளராக பாஜக மாவட்டத் தலைவர் மகா.சுசீந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார், முன்னதாக காந்தி அருங்காட்சியகம் எதிரே உள்ள பூங்கா முருகன் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார், பாஜக மாற்று வேட்பாளர் உடன் 5 பேருக்கு மேலாக கூடுதல் நபர்களை அனுமதித்த காவல்துறை அதிகாரியை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை செய்தார், தேர்தல் ஆணைய விதிமுறைப்படி வேட்பாளருடன் 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும், ஆனால் கூடுதல் நபர்களை அனுமதித்த குறை ஆய்வாளரை எச்சரிக்கை செய்தார், காவல்துறை ஆய்வாளரை நேரில் அழைத்து மாவட்ட ஆட்சியர் கடிந்து கொண்டார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக வேட்பாளர் இராம சீனிவாசன் கூறுகையில்

“திமுக, அதிமுக அல்லாத புதிய அரசியல் அதிசயம் மதுரையில் நடைபெற உள்ளது, நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் மோடி அலை வீசத் தொடங்கியுள்ளது, தேர்தல் பத்திரத்தின் மூலம் பெறப்பட்ட பணத்தை பிற கட்சிகள் எப்படி செலவழிக்குமோ அதே போன்று பாஜகவும் செலவழிக்கும், மக்கள் மனதில் பிரதமர் உள்ளதால் 400க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என கூறுகிறோம், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்த சாதனை என்பது கீழடியில் நடிகர் சூர்யா ஜோதிகாவை வைத்து படப்பிடிப்பு நடத்தியது” என கூறினார்.