• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நடிகர் சிவாஜி கணேசன் – 22 வது நினைவு நாள்

Byஜெ.துரை

Jul 21, 2023

மறைந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் 22 வது நினைவு நாளை முன்னிட்டு நடிகர் சங்க வளாகத்தில் அவரது படத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சரவணன், ஶ்ரீமன், பிரகாஷ், ஹேமச்சந்திரன், நடிகர் சங்க மேலாளர் தாம்ராஜ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் உட்பட பலர் மலர் தூவி வணங்கி மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் நாசர் கூறியதாவது.

நான் நடிக்கின்ற நொடிப்பொழுதும் நினைவிற்கு வருகின்ற என் ஆசான். என் சமூகத்தில் தோன்றி வண்டமிழ் பேசி காலத்தால் கரையாத காவியங்கள் படைத்திட்ட என் பெருமகனார் சிவாஜிகணேசன் நினைவேந்தல் இன்று. தென்னிந்திய நடிகர் சங்கமும் வையமும் உம்மை போற்றுதும்… போற்றுதும்… போற்றுதும்… என்று கூறினார்.