• Tue. Nov 4th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

முதல் இடத்துக்கு போராடும் நடிகர் கிரண் அப்பாவரம்

Byதன பாலன்

Feb 19, 2023

தெலுங்கு சினிமாவில் வாரிசு நடிகர்கள் மட்டுமே முன்னணிக்கு வர முடியும் என்கிற சூழலில்
செபாஸ்டியன்’, ‘சம்மதமே’ போன்ற படங்களில் ராயலசீமா வட்டார வழக்கில் நடித்த கிரண் அப்பாவரம்சுவாரசியமான திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தெலுங்கு திரையுலகில் பெரிதும் மதிக்கப்படும் ஜிஏ2 பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ளவினரோ பாக்யமு விஷ்ணு கதா’ (விஷ்ணுவின் கதையை கேட்டால் புண்ணியம்) படத்தில்
கிரண் அப்பா வரம் நாயகனாக நடித்துள்ளார்மகா சிவராத்திரியை முன்னிட்டு இப்படம் வெளியாகி உள்ளது. இது பற்றி கிரண் அப்பாவரம் கூறியதாவது
பெரிய தயாரிப்பு நிறுவனங்களுடன் பணிபுரிய வேண்டும் என்பது வளர்ந்து வரும் என் போன்ற நடிகர்களின் கனவாகும். ஏனெனில், அப்போதுதான் வணிகரீதியாக சந்தை மதிப்பை உயர்த்தவும், முன்னணி நடிகராகவும் உயர முடியும் குறுகிய காலத்திலேயே பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு
கிடைத்துள்ளது. தற்போது தெலுங்கு திரைப்பட தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் யூ வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ‘மீட்டர்’ மற்றும் ‘ரூல்ஸ் ரஞ்சன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறேன் என்றார்.


எனது முந்தைய படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும், இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களின் மனதில் எனக்கென ஒரு இடம் கிடைத்துள்ளது அதனால்தான் மகாசிவராத்திரியை முன்னிட்டு வெளியான படங்களில்
‘வினரோ பாக்யமு விஷ்ணு கதா’ அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் மற்ற பிப்ரவரி வெளியீடுகளை விட அதிக எதிர்பார்ப்பை இது ஏற்படுத்தி இருந்ததுமுன் வரிசையில் இடம் பிடிப்பதற்கு இன்னும் ஒரே ஒரு வெற்றி மட்டுமே தேவை எனும் நிலையில் இருந்த எனக்கு அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் திரைப்படமாக ‘வினரோ பாக்யமு விஷ்ணு கதா’ அமைந்துள்ளது என்றார்