• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

பொன்னியின் செல்வன் படக்குழுவினருக்கு நடிகர் துல்கர் சல்மான் வாழ்த்து..

ByA.Tamilselvan

Oct 1, 2022

நேற்று வெளியான பொன்னியின் செல்வன் படக்குழுவினருக்கு மலையாள நடிகர் துல்கல்சல்மான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் தமிழகத்தில் மட்டுமல்ல கேரளாவிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இதன் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. பொன்னியின் செல்வன் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றில் பல நண்பர்கள் ஒரு குடும்பம் போல நடித்துள்ளனர். இதை தனிப்பட்ட வெற்றியைப் போல் உணர்கிறேன். மேலும், படக்குழுவிற்கு தலை வணங்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.