தேனி மாவட்டத்தில் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் சொந்த ஊரில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த நடிகர் தனுஷ். அவருடன் அவரது சகோதரர் இயக்குனர் செல்வராகவன் அவரது மனைவி குழந்தை மற்றும் தனுஷின் இரு மகன்கள் யாத்ரா, லிங்கா மற்றும் அவர்களின் பெற்றோர் இயக்குனர் கஸ்தூரிராஜா மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

மதுரை விமான நிலையத்தில் இரந்து காரில் அவரது சொந்த ஊருக்கு புறப்பட்ட சென்றனர். கடந்த வாரம் மதுரையில் நடைபெற்ற இட்லி கடை படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் தனுஷ் மதுரை வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.