• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தீண்டாமை கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.., முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை..!

ByKalamegam Viswanathan

Nov 4, 2023
தீண்டாமைக் கொடுமைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல்அப்பாஸ் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..,
நெல்லை மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றுப்படுகையில் கடந்த 30ஆம் தேதி குளிக்கச் சென்ற இரண்டு பட்டிலின இளைஞர்கள் மீது கடுமையாக தாக்கியவர்களை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது. படு காயம் அடைந்த  பட்டியலின இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர் என்கிற செய்தி மிகுந்த வேதனையை தருகிறது. 
பட்டிலின சமூகத்தை சேர்ந்த இளைஞர்களை தாக்கியவர்கள் மீது எந்த வித பார பட்சம் பார்க்காமல் சட்ட ரீதியாக கடுமையாக தண்டிக்க பட வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது. தமிழகத்தில் தலை விரித்தாடி வரும் தீண்டாமை கொடுமைகளில் இருந்த பட்டிலின சமூக மக்களை பாதுகாக்க முதல்வர் மு. க ஸ்டாலின் அவர்கள் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.