• Wed. May 1st, 2024

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்

Byவிஷா

Feb 16, 2024

அடுத்த கல்வியாண்டு முதல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் விருப்பப்பாடத்திற்கும் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. விருப்பப்பாடத்துக்கான தேர்ச்சி மதிப்பெண் அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது.
தமிழைத் தாய்மொழியாக கொண்டு விருப்பப் பாடம் தேர்வு செய்யாத 10-ம் வகுப்பு மாணவர்கள் தற்போதுள்ள வழக்கப்படி 5 பாடங்களில் தேர்ச்சி பெற்றாலே போதும். ஆனால், தமிழ் அல்லது ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொள்ளாத மாணவர்கள் இனி விருப்பப் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். அந்த வகையில் விருப்பப் பாடத்திற்கான தேர்ச்சி மதிப்பெண் 35 ஆக நிர்ணயித்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
மொழி சிறுபான்மை பள்ளியில் பயிலும் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியலுடன் விருப்பப் பாடத்திற்கான தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உருது, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட விருப்பப் பாடங்களில் பெறும் மதிப்பெண்களும் இனி சான்றிதழில் அச்சிட்டு தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு இதுவரை உள்ள நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. அடுத்த கல்வி ஆண்டிலிருந்து தான் இந்த புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *