திமுக ஆட்சியில் எது வளர்ச்சி அடைந்ததோ இல்லையோ, கொலை சம்பவங்கள் அதிக வளர்ச்சி அடைந்துள்ளன என்று கோவை தொகுதி எம்.எல்.ஏ வானதிஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
திமுகவின் நாடகத்துக்கு தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், எம்எல்ஏ-மான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:
தமிழக பாஜக, மதுரை மாவட்ட பாஜக அணியை சேர்ந்த சக்திவேல் அவர்களை நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் வண்டியூர் டோல் கேட் அருகே வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு பாஜக என்றும் உறுதுணையாக இருக்கும்.
தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் குற்றங்கள் நடந்து வந்தது. ஆனால், மாநிலம் முழுவதும் குற்றசெயல்கள் தொடர்ச்சியாக நடப்பதும் அத்தகைய அராஜகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் காவல்துறை கண்டு கொள்ளாமல் இருப்பது தான் தமிழக மக்களுக்கு இந்த திராவிட மாடல் விடியா அரசு கொடுத்த அன்பு பரிசு. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எது வளர்ச்சி அடைந்ததோ இல்லையோ கொலை சம்பவங்களின் எண்ணிக்கை மட்டும் வளர்ச்சியடைந்துள்ளன.