• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

போடிநாயக்கனூர் கிராமத்தில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா, போதை பொருட்களை விற்பனை செய்து வரும் நபர் மீது நடவடிக்கை-கிராம மக்கள் புகார் மனு

ByJeisriRam

May 31, 2024

போடிநாயக்கனூர் அருகே உள்ள கிராமத்தில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வரும் நபர் மீது பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்து புகார் மனுவை அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே அமைந்துள்ளது ராசிங்கபுரம் கிராமம் இந்த கிராமத்தில் ஒரு சமுதாயத்துக்கு உட்பட்ட சுமார் 300 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர்

இந்த சமுதாயத்திற்கு சொந்தமான மண்டபத்தில் உள்ள ஆறு கடைகளை வாடகைக்கு விடப்பட்ட நிலையில் இவர்களது சமுதாயத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கு பெட்டிக்கடை வைப்பதற்கு ஒரு கடை வாடகைக்கு விடப்பட்டது

இந்நிலையில் தங்கராஜ் தனது கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கஞ்சா மற்றும் மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றன

கிராமத்திற்கு நடுவே அமைந்துள்ள இந்த கடையின் மூலம் அருகே உள்ள பள்ளி மாணவர்களுக்கும் புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்து வருவதாகவும் இது குறித்து போடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் தங்களை அலைக்கழித்து வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இது குறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை ராசிங்கபுரத்தை சேர்ந்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் அளித்தனர்.

கிராமத்தில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்து சிறுவயதிலேயே போதை பழக்கத்திற்கு அடிமை ஆகி வருவதால் தங்கராஜ் மீது உரிய நடவடிக்கை எடுத்து போதை பழக்கத்தில் இருந்து பள்ளி மாணவர்களை அடிமை ஆவதை தடுக்க தங்கராஜ் மீது உரிய நடவடிக்கை எடுத்து போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.