• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டி பகுதியில் அரசுபள்ளிகளின் மாணவர்கள் சாதனை..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் உள்ள அரசுமேல்நிலைப்பள்ளிகளில் பனிரெண்டாம் வகுப்பில் அதிகமதிப்பெண் பெற்று மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

பாண்டியராஜபுரம் மதுரை சர்க்கரை ஆலை அரசுமேல்நிலைப்பள்ளியில் 60மாணவர்கள் தேர்வு எழுதி 60மாணவர்களும் தேர்ச்சியடைந்து 100 சதவிகிதம் பெற்றுள்ளனர். முதல்மதிப்பெண் சந்தோஷ் 536, இரண்டாவது மதிப்பெண் யுவராணி 529, மூன்றாம் மதிப்பெண் திவாகர் 525 இதில் சந்தோஷ் வரலாறுபாடத்தில் 100மதிப்பெண் பெற்று சாதனைபடைத்துள்ளார் என்று தமைமை ஆசிரியர் விஜயக்குமார் தெரிவித்தார். வாடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 105மாணவர்கள் தேர்வு எழுதி 85மாணவர்கள் தேர்ச்சியடைந்து 86சதவிகிதம் பெற்றனர்.

இதில் மாணவன் யாசின் 530மதிப்பெண் பெற்று முதலிடமும், ராகுல் 458மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், சுந்தரபாண்டியன் 457மதி;பெண் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனர். யாசின் தமிழில் 99மதிப்பெண் பெற்றார் என்று பள்ளி தலைமை ஆசிரியர் இனிக்கோ எட்வர்ட்ராஜா தெரிவித்தார். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 148மாணவர்கள் தேர்வு எழுதி 147மாணவர்கள் தேர்ச்சியடைந்து 99.3சதவிகிதம் தேர்ச்சிபெற்றனர். இதில் வெகிலேஸ்வரி 546மதிப்பெண பெற்று முதலிடமும்;, ஸ்ரீதேவி 536 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், பூஜா 525 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பெற்றார். வெகிலேஸ்வரி கணக்குபதிவியியல் பாடத்தில் 100மதிப்பெண்பெற்றார் என்று தலைமை ஆசிரியர் திலகவதி தெரிவித்தார். அய்யங்கோட்டை அரசுமேல்நிலைப்பள்ளியில் 59மாணவர்கள் தேர்வு எழுதி 55மாணவர்கள் தேர்ச்சியடைந்து 93.2சதவிகிதம் பெற்றனர்.

வைஷ்ணவி 534மதிப்பெண் பெற்று முதலிடமும், தனுஸ்ரீ 525 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், ஹாசினி 494மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனர். என்று பள்ளி தலைமை ஆசிரியர் மாரிச்செல்வம் தெரிவித்தார்.