• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரையில் சிலம்பம் சுற்றுவதில் சாதனை!

Byகுமார்

Jan 23, 2022

மதுரையில், 4 வயது முதல் 25 வயது வரையிலான சிலம்ப போட்டியாளர்கள் கண்களை கட்டிக்கொண்டு தொடர்ந்து 90 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி அசத்தல்!

மதுரை எம் கே புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 4 வயது முதல்  25 வயது வரையிலான 50 மாணவ மாணவியர் கண்களை கட்டிக்கொண்டு தொடர்ந்து 90 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி  சிலம்பம் அச்சிவர்ஸ் புக் ஆப் ரேகார்ட்ஸ் சாதனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து 90 நிமிடங்கள் கண்களை கட்டிகொண்டு சிலம்பம் சுற்ற 6 மாதங்கள் வரை பயிற்சி பெற்று இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிலம்ப கலை சிறுவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிப்பதால் கொரோனா போன்ற கொடிய வைரஸ்களில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என்பதாலும், சிலம்பம் விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் பெற்ற வீரர்களுக்கும் சாதனை படைத்தவர்களுக்கும் அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 3 சதவீத இடஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சிலம்ப ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.