



நேற்றைய தினம் தீபாவளி திருநாளை பட்டாசு வெடித்து அனைவரும் கொண்டாடிய நிலையில் அதன் குப்பைகளை வீதிகளில் நிறைந்து கிடக்கின்றன.
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் நாள்தோறும் 15 டன் குப்பைகள் சேகரிக்கப்படும் நிலையில், தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு வெடிக்கப்பட்ட பட்டாசு குப்பைகளை, அட்டைப் பெட்டிகள் மற்றும் கழிவுகளை அகற்றும் பணியில் நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் களத்தில் இறங்கி நேரில் பார்வையிட்டு அகற்றும் பணிகளை நிரந்தர மற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களை வைத்து மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை அரண்மனை வாசல், காந்திவீதி நேரு பஜார், பகுதிகளில் நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நகரமன்ற உறுப்பினர்கள் குப்பை அகற்றும் பணியினை ஆய்வு மேற்கொண்டு, பணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். இன்று அரசு விடுமுறை அறிவித்துள்ள நிலையில் துப்புரவு பணியாளர்கள் தன் நலம் பாராது, விடுமுறை நாளில் நகரை தூய்மைப்படுத்தும் பணிகள் ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது என்ற நகர் மன்ற தலைவர் துரை.ஆனந்த் பொதுமக்கள் மக்கும் குப்பை மக்கா குப்பை என பிரித்து வழங்கினால் அகற்றும் பணி விரைந்து முடிக்க ஏதுவாகவும் குப்பைகளை தரம் பிரிப்பதற்கு எளிதாகவும் இருக்கும் என்பதால் பொதுமக்கள் தரம் பிரித்து குப்பைகளை வழங்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


