• Wed. Apr 8th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

டேங்கர் லாரி மீது பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியதில் விபத்து..,

ByKalamegam Viswanathan

Apr 8, 2026

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தனக்கன்குளம் நான்கு வழி சாலை ஹோட்டல் ஆர்யாஸ் அருகே முன்னால் சென்று கொண்டிருந்தார். டேங்கர் லாரி மீது பின்னால் வந்த சரக்கு வாகன மோதியதில் இருவர் படுகாயம். டேங்கர் லாரி பஞ்சரான நிலையில் சாலையில் ஓரமாக மெதுவாக சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை இயக்கி வந்த ஓட்டுநர் தூக்கம் கலக்கத்தில் விபத்தை ஏற்படுத்தியதாக தகவல் மேலும் இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை.

தார் என்று சொல்லும் டேங்கர் லாரி திருமங்கலத்தில் லோடை இறக்கிவிட்டு மீண்டும் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தபோது தனக்கன்குளம் நான்கு வழிச்சாலையில் நாகர்கோவிலில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு திருமங்கலத்தில் இறக்கிவிட்டு மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரி முன்னே சென்ற டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சரக்கு வாகனத்தில் பயணித்த கணவன் மனைவியான முரளி மற்றும் கிருஷ்ண ஜெயந்திக்கும் காயம் ஏற்பட்டது. ஓட்டுநர் முரளி குமார் லேசான காயமும் பக்கத்தில் அமர்ந்திருந்த கிருஷ்ண ஜெயந்திக்கு பலமான காயங்கள் ஏற்பட்டு இருவரும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓட்டுநர் முரளி குமார் நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு சரக்கேற்றி வந்து இறக்கி விட்ட பிறகு மீண்டும் வேற இடத்தில் இறக்குவதற்காக வண்டியை ஓட்டி வந்த பொழுது தூக்க கலக்கத்தில் முன்னாள் சென்ற வாகனத்தில் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னாள் சென்ற டேங்கர் லாரி ‌தார் ஏற்றி இறக்கிய பின் காலியான வாகனம் பஞ்சர் ஆனதால் வாகனம் சாலையில் மெதுவாக சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.