மதுரை மேலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேளாண்மை கல்லூரி அருகே மதுரை நோக்கி சென்ற அரசுபேருந்து மீது பின்னால் வந்த மற்றொரு அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இரண்டு பஸ்களின் முன்புறம் பின்புறம் சேதமடைந்தது பயணிகள் யாருக்கும் எவ்வித அசம்பாவிதம் ஏற்படவில்லை.
இந்த விபத்து குறித்து சாலையோரம் நின்றவர்கள் கூறிய போது சாலை தடுப்பான் அருகே தனியார் பேருந்து ஒன்று அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றதாகவும், அரசு பேருந்து ஓட்டுநர் தனியார் பேருந்தை நிறுத்தி அந்த ஓட்டுனரை கண்டிக்க சென்றதாகவும், அப்போது முந்திய பேருந்து பிரேக் போட்டதால் பின்னால் வந்த மற்றொரு அரசு பேருந்து மோதியது. இதனால் தான் விபத்து ஏற்பட்டது என்று கூறினர்.