மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகபட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் சூரிய பிரகாஷ் (30) இவர் தனது மோட்டார் சைக்கிளில் வாடிப்பட்டியில் இருந்து வடுகபட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.

அதிகாலை 4.30 மணிக்கு ஆண்டிபட்டி பெட்ரோல் பங்க் அருகே ஹரியானாவில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரி இடது புறம் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் சிக்கியது. அதை உணராமல் லாரி டிரைவர் லாரியை 16 கிலோமீட்டர் வரை ஓட்டிக்கொண்டு சென்றார்.
இதை பின்னால் வந்த வாகன ஓட்டிகள் சமயநல்லூர் அருகே கட்டபுளி நகரில் லாரியை வழி மறித்து மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் சிக்கி உயிரிழந்ததை தெரிவிக்க உடனே லாரியை விட்டு விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். தகவல் அறிந்த சமயநல்லூர் போலீஸ் சப்ஸ்பெக்டர் ரபிக் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று வலது கால் துண்டாகிய நிலையில் இருந்த சூரிய பிரகாஷ் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.