சோழவந்தானில் மின்சார வாரியம் அருகிலேயே மின்விளக்குகள் எரியாத மின்கம்பங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் மின்சார வாரியம் இருக்கும் பகுதியில் உள்ள மின்கம்பங்களில் மின்விளக்குகள் எரியாததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மின்சார வாரியம் அருகில் தீயணைப்புத் துறை அலுவலகம் காவல்துறை அலுவலகம் பெட்ரோல் பங்க் நிலையம் உள்ளிட்ட முக்கியமான பகுதிகள் உள்ள நிலையில் இந்தப் பகுதியில் உள்ள மின்கம்பங்களில் கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக மின்விளக்குகள் எரியாததால் விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதாக, தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மின்சார வாரிய அலுவலரிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், நேற்று முன்தினம் கூட இருட்டில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் விபத்து ஏற்பட்டு மருத்துவமனை சென்றதாகவும், சோழவந்தான் மதுரை செல்ல முக்கிய சாலை பகுதியாக இருப்பதால் போக்குவரத்து அதிகம் நிறைந்த பகுதியாகவும் உள்ள நிலையில் மின் விளக்குகள் எரியாத நிலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மின்சார துறை அதிகாரிகள் விரைந்து மின்வாரியம் அருகில் உள்ள மின்கம்பங்களில் மின்விளக்குகளை பொருத்தி விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
