• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு

Byp Kumar

Jun 12, 2023

மதுரை எல் கே பி நகர் நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் கடைபிடிக்கப் பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். ஆசிரியை அனுசியா குழந்தைகள் படிக்காமல் வேலைக்கு செல்வதால் அவர்களுக்கு ஏற்படும் உடல், மனநல சிக்கல்களை விளக்கினார். மேலும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி குழந்தைகள் அனைவரும் கண்டிப்பாக கல்வி கற்க வேண்டும் என எடுத்துரைத்தார்.

அனைத்து குழந்தைகளும் கட்டாயம் கல்வி கற்கவும் இடைநிற்றலை தடுக்கவும் அரசு பல நலத்திட்ட உதவிகளை வழங்குகிறது. அத்தகைய நலத்திட்ட உதவிகள் மூலம் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆசிரியை சாந்தி குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதி மொழியை வாசிக்க அனைத்து குழந்தைகளும் உறுதி மொழி ஏற்றனர். முன்னதாக அனைத்து குழந்தைகளுக்கும் விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டன. மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை நிறுவனர் பாலமுருகன் அவர்கள் அனைத்து குழந்தைகளுக்கும் எழுது பொருட்கள் இலவசமாக வழங்கினார். ஆசிரியர் மனோன்மணி நன்றி கூறினார். விழாவில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.