• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

புகையிலை பொருட்களுக்கான தடை ரத்து

ByA.Tamilselvan

Jan 25, 2023

புகையிலை பொருட்களுக்கு தடை விதித்த பாதுகாப்பு ஆணையரின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீது விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில், உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், உணவு பாதுகாப்பு சட்டத்தில் புகையிலை பொருட்களுக்கு தடை விதித்த பாதுகாப்பு ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இதுபோன்று தடை உத்தரவை மீறியதாக எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தில் புகையிலை பொருட்களுக்கு முழு தடை விதிக்கவில்லை எனவும் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.