• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

அபிராமி இம்பாக்ட் 2025..,

BySeenu

May 25, 2025

கோவை சுந்தராபுரம் பகுதியில் செயல்பட்டு ஸ்ரீ அபிராமி மருத்துவமனை மருத்துவ துறையில் பயில விரும்பும் மாணவர்களின் கனவை நிறைவேற்றும் விதமாக ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில்,அபிராமி நிறுவனங்கள் ஐந்து முக்கிய மருத்துவக் கல்வியுடன் “அபிராமி இம்பாக்ட் 2025” நிகழ்வு அபிராமி நர்சிங் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை தலைவர் குந்தவி தேவி மற்றும் இயக்குனர்கள் டாக்டர் செந்தில் குமார்,டாக்டர் பாலமுருகன், சுசித்ரா,உமாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலை கழக துணைவேந்தர் டாக்டர் நாராயணசாமி கலந்து கொண்டு இம்பாக்ட் நிகழ்வை துவக்கி வைத்தார்.

இதில், கூட்டு சுகாதார அறிவியலில் புதிய படிப்புகள், அபிராமி எலைட் நர்சிங் திட்டம், மருந்தியல் கல்லூரி விலங்கு இல்லத்தின் திறப்பு விழா,, முதுகலை மருத்துவ திட்டம் துவக்கம் மற்றும் புதிய ஸ்ரீ அபிராமி கார்ப்பரேட் அலுவலக திறப்பு என ஐந்து புதிய ஒருங்கிணைக்கப்பட்ட அபிராமி இம்பாக்ட் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இதில் பேசிய அவர்,மருத்துவ துறை மற்றும் சுகாதார கல்வியை மேம்படுத்துவது மற்றும் எதிர்கால தொழில் நுட்பங்களை கருத்தில் கொண்டு அபிராமி கல்வி நிறுவனங்கள் புதிய வசதிகளை துவக்கி உள்ளதாக கூறினார்.

மருத்துவ துறை தொடர்பான நர்சிங், மருந்தகம், பிசியோதெரபி, தொழில் நுட்பம் மற்றும் சிகிச்சை முறை அறிவியல் நவீனமாகி வருவதாக பேசிய அவர்,வரும் காலங்களில் மருத்துவ துறையில் தொழில் நுட்பங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவித்தார்.