• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

திருப்பூரில் அப்துல்கலாம் இளம் சாதனையாளர் விருது வழங்கும் விழா

திருப்பூரில் அப்துல் கலாம் இலட்சிய இந்தியா இயக்கம் சார்பில் டாக்டர் ஆ. ப. ஜெ அப்துல் கலாமின் 90 வது பிறந்த வருடத்தை முன்னிட்டு தனித்திறனோடு சாதனை படைத்த 90 மாணவ, மாணவிகளுக்கு அப்துல் கலாம் இளம் சாதனையாளர் விருது 2021 வழங்கப்பட்டது. மேலும் சாதனைகள் படைத்து தாமதமாக பதிவு செய்து கலந்து கொண்ட அனைவருக்கும் 180 மாணவ, மாணவிகளுக்கும் சிறப்பு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.


நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகராக திகழ்ந்த பொன்ராஜ் கலந்து கொண்டு விருதுகளை வழங்கிசிறப்புரையாற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் பெற்றோர்களும், ஆசிரியர்களும், 2 வயது குழந்தைகள் முதல் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் தமிழ்நாட்டில் 14 மாவட்டத்தில் இருந்து மொத்தம் 900 பேர் கலந்து கொண்டனர்.